Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 04 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக, கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மழையின் தாக்கம் வெகுவாக குறைந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக லேசான சாரல் மழையானது தென்காசி மாவட்டத்தில் பொழிந்து வருகிறது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக, இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருவதால் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN