Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவின் நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தலைமை சார்பில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சக்கரபாணி மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
கட்சியின் அடிமட்ட அளவிலான கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக அளவில் செயல்பாடுகளை மேம்படுத்துதல், புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் பொறுப்புகளை மறுவரையறை செய்வது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கட்சியை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தும் வகையில், அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டுவருவதே இந்த மறுசீரமைப்பு குழுவின் முக்கிய நோக்கமாகும்.
வரும் நாட்களில் மாவட்ட வாரியாக ஆய்வுகளை மேற்கொண்டு, தலைமைக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் குழு திட்டமிட்டுள்ளது.
கட்சியின் கட்டுக்கோப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனைகள் அமைந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b