Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 04 ஜூலை (ஹி.ச.)
மகாபலிபுரம் தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மற்றும் MR.விஜயபாஸ்கர் 20 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த மாபெரும் இணைப்பு விழாவில் சுமார் 15,000 பேருக்கு சிக்கன் பிரியாணிடன் கூடிய அசைவ உணவும், 5000 பேருக்கு சைவ உணவு வழங்கப்பட்டது.
பிரியாணிக்குப் புகழ்பெற்ற திண்டுக்கல் ஜாபர் பாய் மற்றும் சைவ உணவிற்கு புகழ்பெற்ற காரைக்குடி அமெரிக்க நடேசன் அவர்களின் பேரன் ACNS.குமார் ஆகியோரின் தலைமையில் 600க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் சமையல் பணியில் ஈடுபட்டனர்.
இதில்,கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட அசைவ உணவில் சிக்கன் பிரியாணி, முட்டை மசாலா, தயிர் பச்சடி, தாளிச்சா உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
அதேபோல் சைவ உணவு வகையில் பருப்பு மசியல், மல்லி சாதம், மேங்கோ ரோல், வெஜ் பிரியாணி, வெங்காயம் மாதுளை வெள்ளரி தயிர் பச்சடி, சப்பாத்தி, சௌசௌ கூட்டு, முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல், மிளகாய் மாவோடு, இஞ்சி வேர்கடலை மாங்காய்o தேங்காய் பால்மண்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், கார்ன் கட்லெட், மாங்காய் இனிப்பு பச்சடி, சைவ ஈரல் மசாலா, தக்காளி கெட்டி குழம்பு, கதம்ப சாம்பார், மைசூர் ரசம், தயிர், கும்பகோணம் ஊறுகாய், நுங்கு பாயாசம், ஐஸ்கிரீம், பீடா உள்ளிட்ட 20 வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சராக டாக்டர் சி விஜயபாஸ்கர் இருந்தபோது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கட்சி நிகழ்ச்சிகளில் கட்சித் தொண்டர்களுக்கு உணவுகள் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.
அந்த வகையில் மகாபலிபுரத்தில் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மற்றும் கே ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கும் சேர்த்து இந்த சமையல் கலைஞர்கள் சிறப்பான முறையில் சமைத்து பரிமாறி இருக்கிறார்கள்.
அத்தனை பேரின் பாராட்டுதலையும் சேர்த்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விருந்து சமைத்து பரிமாறிய சமையல் கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.
Hindusthan Samachar / Durai.J