நவீன இத்தாலியின் தந்தை -கரிபால்டி..!
தமிழ்நாடு, 04 ஜூலை (ஹி.ச.) ஜூஸபெ கரிபால்டி (Giuseppe Garibaldi) என்பவர் நவீன இத்தாலியின் தந்தை மற்றும் அந்த நாட்டை ஒருங்கிணைத்த மிகமுக்கியமான தேசிய மாவீரர் ஆவார். இவர் 1807 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிரான்சின் நைஸ் நகரில் பிறந்தார். சிதறிக்கிட
_


தமிழ்நாடு, 04 ஜூலை (ஹி.ச.)

ஜூஸபெ கரிபால்டி (Giuseppe Garibaldi) என்பவர் நவீன இத்தாலியின் தந்தை மற்றும் அந்த நாட்டை ஒருங்கிணைத்த மிகமுக்கியமான தேசிய மாவீரர் ஆவார்.

இவர் 1807 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிரான்சின் நைஸ் நகரில் பிறந்தார்.

சிதறிக்கிடந்த இத்தாலியப் பகுதிகளை ஒன்றிணைத்து ஒற்றை தேசமாக உருவாக்குவதில் இவருடைய பங்கு இன்றியமையாதது

நவீன இத்தாலியின் தந்தையான ஜுஸபே கரிபால்டி (Giuseppe Garibaldi) 1807ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பிரான்ஸின் நைஸ் நகரில் பிறந்தார்.

ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கும் இயக்கத்தில் இணைந்து போராடினார்.

இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர்படையின் புகழ், உலகம் முழுவதும் பரவியது.

இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன.

இத்தாலி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர் ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை.

இவர் ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் 'ஹீரோ ஆஃப் டூ வேர்ல்ட்ஸ்' (Hero of the Two Worlds) என்று போற்றப்பட்டார்.

இத்தாலிய ஒருங்கிணைப்பு வரலாற்றில் மஜினி 'ஆத்மா'வாகவும், கவுண்ட் காவூர் 'அறிவு'க் கூர்மையாகவும், கரிபால்டி அதன் 'ஆயுதம்' அல்லது 'வாள்' ஆகவும் திகழ்ந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடக்கத்தில் சுமார் 10 ஆண்டுகள் ஒரு மாலுமியாகப் பணியாற்றிய கரிபால்டி, கொரில்லாப் போர் முறைகளில் (Guerrilla warfare) மிகச்சிறந்த வல்லுநராகத் திகழ்ந்தார்.

அசாதாரண ராணுவத்திறன், வீரம், முடிவெடுக்கும் ஆற்றல், செயல்திட்டம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற கரிபால்டி 1882ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J