Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது.
தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுக்கும் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
நேற்று முன் தினம் மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,550க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,700க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,700க்கும், ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P