எந்த பிரச்சினை என்றாலும் ஆளுநர் மாளிகையை தொடர்பு கொள்ளலாம் – ஆளுநர் அர்லேகர் அழைப்பு
சென்னை, 04 ஜூலை (ஹி.ச.) பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தயக்கமின்றி ஆளுநர் மாளிகையை தொடர்பு கொள்ளலாம். அவர்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்துவேன் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக
அர்லேகர்


சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)

பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தயக்கமின்றி ஆளுநர் மாளிகையை தொடர்பு கொள்ளலாம்.

அவர்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்துவேன் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,

ஆளுநர் மாளிகை மக்களுக்கான அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.

மக்களிடமிருந்து வரும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணும் வகையில் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவதே தனது பொறுப்பு என்றும், பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஆளுநரின் இந்தக் கருத்து, மாநில அரசின் செயல்பாடுகள் மற்றும் ஆளுநரின் ஆய்வுப் பயணங்கள் தொடர்பாக அரசியல் விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam