Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச)
தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், தமிழக அரசு தரப்பில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க நேரம் கோரப்பட்ட நிலையில்,
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சந்திப்பதற்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.
தலைமைச் செயலாளர் தலைமையிலான உயரதிகாரிகள் குழு ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பில், அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரம், சட்டம்-ஒழுங்கு நிலை, ஆளுநரின் மாவட்ட ஆய்வுப் பயணங்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஆளுநரின் மாவட்ட ஆய்வுப் பயணங்கள் மற்றும் அதுகுறித்த அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக அரசு தரப்பில், சந்திப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam