திருப்பூரில் கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை
திருப்பூர், 04 ஜூலை (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திருப்பூர் மாவட்டம் கருமாரபாளையம் பகுதியில் வசித்து வந்த நிலையில்
Husband kills pregnant wife and commits suicide in Tiruppur.


திருப்பூர், 04 ஜூலை (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்கள் திருப்பூர் மாவட்டம் கருமாரபாளையம் பகுதியில் வசித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த மனைவி ஸ்ரீமதியை சரவணகுமார் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் குடும்ப தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பிணிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b