Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி , 04 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக இன்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி ரூ.10,000 பிணைத்தொகை செலுத்தி, 10 நாட்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனது சொந்த ஊரான தண்டுபத்து பகுதியைச் சேர்ந்த பாலகணேசன் மற்றும் சுரேஷ் ஆகியோர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்தாரர்களாக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஜாமீன் நடைமுறைகளை நிறைவேற்றிய பின்னர், நீதிமன்றம் விதித்துள்ள மற்ற நிபந்தனைகளையும் அனிதா ராதாகிருஷ்ணன் பின்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam