சங்கராபுரத்தில் ஆடி சிறப்பு சலுகை - ரூ.100-க்கு சேலை, சட்டை வாங்க பொதுமக்கள் அலைமோதல்
கள்ளக்குறிச்சி, 04 ஜூலை (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையால், தனியார் ஜவுளிக் கடை முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்து பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் கரூர் வைசியா வங்கி எதி
ஆடி தள்ளுபடி


கள்ளக்குறிச்சி, 04 ஜூலை (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையால், தனியார் ஜவுளிக் கடை முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்து பரபரப்பு ஏற்பட்டது.

சங்கராபுரம் கரூர் வைசியா வங்கி எதிரே செயல்பட்டு வரும் நாகராணி ஜவுளி ஸ்டோரில், ஆடி மாத சிறப்பு சலுகையாக ஒரு சேலை ரூ.100 மற்றும் ஒரு சட்டை ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள கடை திறப்பதற்கு முன்பே ஆண்கள், பெண்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடை முன்பு திரண்டனர்.

கடை திறக்கப்பட்டவுடன், ஒருவர் மற்றொருவரை முந்திக்கொண்டு கடைக்குள் நுழைந்து சலுகை விலையில் துணிகளை வாங்கிச் சென்றனர்.

இதனால் கடை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

ஆடி மாதத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட குறைந்த விலை சலுகைக்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்ததால், விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Hindusthan Samachar / GOKILA arumugam