Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட குழந்தை முறை தொழிலாளர் தடுப்பு படையினர் மாவட்டத்தில் நேற்று (03.07.26) குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றி திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் தொழிலாளர் துறையின் தொழிலாளர் சென்னை துறையின் முதலாம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சு.சங்கீதா தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், குழந்தைகள் உதவி எண் (Child Helpline), சிறப்பு சிறார் காவல் பிரிவு-1 (SJPU-1), மற்றும் AVA ஆகியோருடன் கொடுங்கையூர் மற்றும் கொருக்குப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் திடீர் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பை தைக்கும் பணியிலும், வாகனப் பழுதுபார்க்கும் தொழிலிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொது பதிவு செய்யப்பட்டது. பின்னர், மேலதிக விசாரணை மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இது தொடர்புடைய தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறையால் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் இன்று(04.07.26) தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b