Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனான சந்திப்பு குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில்,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களை, கரூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக பொதுமக்களை பாதித்து வரும் வெண்ணைமலை, புகழிமலை, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் இனாம் நிலப் பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்தித்தேன்.
அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல்,எமது மக்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்சினையில் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, எமது தரப்பைப் புரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.
இக்கூட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினை குறித்து விரிவாக எடுத்துக் கூறினேன்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று மீண்டும் மாண்புமிகு அமைச்சர் அவர்களைச் சந்தித்தேன். எமது தரப்பு. நியாயத்தையும் தீர்வின் அவசியத்தையும் ஆதரங்களோடு விளக்கிக் கூறினோம்.
பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பை அமைச்சர் அவர்கள் மிகுந்த பொறுமையுடனும் கனிவுடனும் கேட்டறிந்தார்.
இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையையும் அளித்தார்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த இனாம் நிலப் பிரச்சினைக்கு விரைவில் நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இளம் வயதிலேயே அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தாலும், மக்களின் குறைகளை பொறுமையாகக் கேட்டறிந்து, தீர்வு காணும் நோக்கத்துடன் வேகமாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வரும் மாண்புமிகு அமைச்சர் தம்பி திரு. ரமேஷ் அவர்களுக்கு கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN