Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பரங்குன்றம், 04 ஜூலை (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலை கல்லூரியில் 38 வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் 700 மாணவர்களுக்கு தனது கரங்களால் பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் சிறப்புரை ஆற்றியதாவது:
நான் பெருமையோடு இருக்கிறேன் அதற்கு காரணம் நான் கிராமத்து இளைஞன்.
நகர்ப்புற வாழ்விடத்தில் வளர்ந்தவன் அல்ல ஆங்கிலம் படித்த இளைஞர் அல்ல கிராமத்துப் பள்ளியில் படித்த இளைஞன் செருப்பு போட முடியாத பொடி மணலில் நடந்த இளைஞர் கிழிந்து மஞ்ச பையில் புத்தகங்கள் போட்டு போன இளைஞன் ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட இளைஞன் எழுதுவதற்கு பேனா புத்தகம் இல்லாமல் என் நண்பர்களிடம் வாங்கி எழுதிய இளைஞன் எனக்கு இந்த வாய்ப்பு அளித்துள்ளீர்கள்.
இன்று ஆயிரம் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் சூழ்நிலை உள்ளதென்றால் அதற்கு நம்மை அளாக்கிய வளர்த்தெடுத்த பெருந்தலைவர் குலதெய்வமாக நின்று இருக்கும் நமது தலைவர் போட்ட பிச்சையில் தான் விசுவநாதன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.
இரு கரங்களினால் லஞ்ச வாங்காத ஊழல் இல்லாத ஒரு அரசியல்வாதி லஞ்சத்தை அனுமதிக்கவே மாட்டேன் என்று காமராஜர்,கக்கன் சொன்னார் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தலைமையிலான அரசாட்சியில் இருப்பவன் நான்.
இந்தியாவின் கிங்மேக்கர் முதலமைச்சர் பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டு இளைஞர்களே அரசியலுக்கு கொண்டு வாருங்கள் என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜர்
1967 க்கு பிறகு 2026ல் அதே காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக இந்த கல்லூரிக்கு வருகை தந்திருக்கிறேன்.
கிங்மேக்கர் என்றால் இளைஞர்களின் எழுச்சி பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு கிங் மேக்கராக முதலமைச்சர் விஜய் அந்த எழுச்சியை உருவாக்கியுள்ளார்.
அரசியல் மாற்றத்திற்கான கிங்மேக்கராக விஜய் உருவாக்கியுள்ளார் அதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன்,
என்றார்.
இதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழா முடிந்து வெளியே வந்த உயர் கல்வித் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க முற்பட்டபோது கவுன் அணிந்திருப்பதால் பேட்டி கொடுக்க முடியாது.
அதனால் பட்டமளிப்பு அங்கியை கழட்டிவிட்டு பேட்டி கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு உணவருந்த சென்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் வாகனத்தை கல்லூரியின் பின் வாசல் வழியாக வரவழைத்து காரில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தொலைபேசியில் பேசுவது போல் செய்தியாளர்களை கண்டு கொள்ளாமல் புறப்பட்டார்.
அமைச்சர் விஸ்வநாதன் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரிடம் கடிதம் அளித்த நிலையில். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து விட்டு புறப்பட்டார்,
என்பது குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / Durai.J