கன்னியாகுமரியில் அணுக்கனிம அகழ்வில் மக்கள் கருத்தே முதன்மை - அமைச்சர் டி.கே. பிரபு உறுதி
சென்னை, 04 ஜூலை (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பாக, உள்ளூர் மக்களின் நலனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்காது என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்துள்ளார். முதலமைச்ச
Prabhu


சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பாக, உள்ளூர் மக்களின் நலனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்காது என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி,

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு அரசு சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டி.கே. பிரபு பங்கேற்றார்.

கூட்டத்தில், மக்களின் நலனுக்கு எதிராகவோ அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலோ அணுக்கனிம அகழ்வு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது. மேலும், உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல் இதுகுறித்து தமிழ்நாடு அரசு எப்போதும் எந்த முடிவையும் எடுக்காது என்று அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நெ. மரிய வில்சன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஐஏஎஸ், குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம அகழ்வு தொடர்பாக எழுந்துள்ள மக்களின் கவலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அச்சங்கள் மத்தியில், மக்கள் கருத்துக்கு முன்னுரிமை அளித்து மட்டுமே அரசு முடிவு எடுக்கும் என தமிழக அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P