லண்டன் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின் - என் மனம் எப்போதும் அறிவாலயத்தில் தான் இருக்கும் உருக்கமான பதிவு
சென்னை, 04 ஜூலை (ஹி.ச.) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ் பெற்ற கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை மேற்கொண்டு வந்தா
மு.க.ஸ்டாலின்


சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ் பெற்ற கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை மேற்கொண்டு வந்தார்.

தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில், இன்பநிதி படித்த மான்செஸ்டர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் நேரில் பங்கேற்று வாழ்த்துவதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பேரன் இன்பநிதி ஆகியோர் இன்று லண்டனுக்குப் புறப்பட்டு சென்றனர்.

முன்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

அறிவாலயத்திற்குத் தினமும் வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள், 'நாங்க இருக்கோம்... மீண்டும் வருவோம்!' என்று அளிக்கும் குரலே எனக்கு எதிரிகளை வீழ்த்தும் பேரூக்கத்தைத் தருகிறது. அயலகத்தில் நான் இருந்தாலும், என் மனம் எப்போதும் அறிவாலயத்தில்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P