கோஸ்தியான்டினிவ்கா கைப்பற்றப்பட்டதாக மாஸ்கோ அறிவிப்பு
மாஸ்கோ, 04 ஜூலை (ஹி.ச.) ரஷியா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள முக்கிய நகரமான கோஸ்தியான்டினிவ்காவை தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நடந்து வரும் ராணுவ நடவடிக்கையில் இது
Moscow announces the capture of Kostiantynivka.


மாஸ்கோ, 04 ஜூலை (ஹி.ச.)

ரஷியா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள முக்கிய நகரமான கோஸ்தியான்டினிவ்காவை தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

நடந்து வரும் ராணுவ நடவடிக்கையில் இது ஒரு முக்கியமான கட்டம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. இந்த வெற்றியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முக்கியமான வெற்றி என பாராட்டியுள்ளார்.

ரஷ்ய பொதுப் படைத் தலைமையகத்தின் தலைவரான ஜெனரல் வலேரி கெராசிமோவ், போர் உத்தி குறித்த அறிக்கையில் இந்த ராணுவ வெற்றியை விரிவாக விளக்கியுள்ளார்.

ரஷ்யாவின் தெற்கு படைப்பிரிவு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொன்பாஸ் பகுதியில் பெரும் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படும் டொனெட்ஸ்க், ரஷ்யாவின் போர் இலக்குகளில் மையமானதாக தொடர்ந்து இருந்து வருகிறது.

கோஸ்தியான்டினிவ்கா நகரம் அதன் புவியியல் அமைவிடம் மற்றும் போக்குவரத்து இணைப்புகள் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நகரை கைப்பற்றுவதன் மூலம் டொனெட்ஸ்கின் மற்ற பகுதிகளை நோக்கி முன்னேற ரஷ்ய படைகளுக்கு வழி திறக்கப்பட்டுள்ளதாக ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

2022 பிப்ரவரியில் தொடங்கிய போரில் இருந்து டொன்பாஸ் பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை ரஷ்யா தனது முக்கிய நோக்கமாக அறிவித்திருந்தது.

எனினும், ரஷ்யாவின் இந்த அறிவிப்புக்கு உக்ரைன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகளின் முன்னேற்றம் சமீப வாரங்களில் மந்தமடைந்துள்ளதாகவும், இழந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் மீட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோஸ்தியான்டினிவ்கா பகுதியில் இன்னும் கடுமையான சண்டை நடைபெற்று வருவதாக கீவ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஆனால் போர் நிறுத்தம் மற்றும் சமாதான முயற்சிகளில் இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் நீடித்து வருகிறது.

Hindusthan Samachar / vidya.b