நெல்லை இரட்டைக் கொலை வழக்கு - 13 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
நெல்லை, 04 ஜூலை (ஹி.ச.) நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மூளைச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து இவர் இவரது மகன்கள் சின்னத்துரை, ஜெயராஜ் ஆகிய மூன்று பேரும் மூலச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் காளிமுத்
Nellai Double Murder Case


நெல்லை, 04 ஜூலை (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மூளைச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து இவர் இவரது மகன்கள் சின்னத்துரை, ஜெயராஜ் ஆகிய மூன்று பேரும் மூலச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் காளிமுத்து மற்றும் அவரது இளைய மகன் ஜெயராஜ் ஆகிய இரண்டு பேரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது

இந்த சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

இந்த நிலையில் முலச்சி கிராமத்தைச் சேர்ந்த 13 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பழிக்கு பலியாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூலச்சி கிராமத்தில் நேற்று காலை முதல் வெள்ளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பில் உள்ளது அந்த கிராமத்துக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளியூரில் வேலை பார்க்கின்ற அந்த கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஊருக்குள் வந்தால் அவர்களிடம் விபரங்களை கேட்டு பெற்ற பிறகு தான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலையாக நிலவிக் கொண்டிருப்பதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN