பெரு நாட்டின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி , 04 ஜூலை (ஹி.ச.) பெரு நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி
A


புதுடெல்லி , 04 ஜூலை (ஹி.ச.)

பெரு நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பெரு நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக கெய்கோ புஜிமோரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரு நாட்டுடனான நெருங்கிய நட்புறவை இந்தியா மிகவும் மதிக்கிறது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.

உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய எனது நல்வாழ்த்துகள்.

இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பெரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA