சிறப்பு டெட் தேர்வு மையத்தில் பள்ளிக் கல்வித்துறை தலைமைச் செயலாளர் மரு. சந்தர மோகன் ஆய்வு
சென்னை, 04 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளில் தற்சமயம் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ‘ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு’ (TNTET 2026) இன்று மற்றும் நாளை (ஜூலை 4 மற்றும் ஜூலை 5, 2026) சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து
சிறப்பு டெட் தேர்வு மையத்தில் பள்ளிக் கல்வித்துறை தலைமைச் செயலாளர் ஆய்வு


சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளில் தற்சமயம் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ‘ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு’

(TNTET 2026) இன்று மற்றும் நாளை (ஜூலை 4 மற்றும் ஜூலை 5, 2026) சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பணியில் இருக்கும் தகுதியற்ற ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த சிறப்புத் தேர்வை நடத்துகிறது.

தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 222 மையங்களில் 61,386 பேர் எழுதினர்.

இதில் 12,001 ஆண்கள்; 49,385 பெண்கள்; 1,321 மாற்றுத்திறனாளிகள்.

நாளை தமிழகம் முழுவதும் மொத்தம் 613 மையங்களில் 1,67,743 பேர் .தாள் 2-ற்கான தேர்வு எழுதவுள்ளனர்.

இதில் 40,535 ஆண்கள்; 1,27,208 பெண்கள்.

சென்னையில் உள்ள 12 முக்கியத் தேர்வு மையங்களில் 3,561 தேர்வர்கள் இன்று தேர்வு எழுதியுள்ளனர்.

நாளை சென்னையில் உள்ள 37 மையங்களில் 10,156 தேர்வர்கள் தாள் 2-ற்கான தேர்வு எழுதவுள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

மரு. சந்தர மோகன் இன்று (04.07.2026) பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு நடைபெறும் சென்னை அம்பத்தூர் எஸ்.ஆர்.எம் மேல் நிலைப்பள்ளி மையத்தை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் ந.லதா, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபிர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b