ராஜஸ்தானில் ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
ராஜஸ்தான், 04 ஜூலை (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் த
மோடி


ராஜஸ்தான், 04 ஜூலை (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைக்கிறார்.

முதல்கட்டமாக, ஜோத்பூர் விமான நிலையத்தில் ரூ.480 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முனையம், விமானப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதோடு, சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பலோத்ராவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.1.06 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

நகர்ப்புற போக்குவரத்து, ரெயில்வே, சாலை, எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் பலோத்ரா பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

மேலும், ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் செயல்படுத்தப்பட உள்ள ஜெய்ப்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

ராஜஸ்தானின் உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மாநில வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P