Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 04 ஜூலை (ஹி.ச.)
குதிரை பேரம் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. என். இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கில், எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி வழங்க முயன்றதாகவும், வாக்கெடுப்பில் குறிப்பிட்ட வகையில் செயல்பட அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அசோக் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அசோக் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam