Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)
சுவாமி விவேகானந்தரின் நினைவுதினம் (மகாசமாதி அடைந்த நாள்) ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.அவர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 39 ஆவது வயதில் மேற்கு வங்காளத்தில் உள்ள பேலூர் மடத்தில் தியானத்தில் இருந்தபடியே மகாசமாதி அடைந்தார்.
ஆன்மீகம், தேசபக்தி மற்றும் இளைஞர் எழுச்சி ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்நாளில் நாடு முழுவதும் அவருக்கு மரியாதைகள் செலுத்தப்படுகின்றன
சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,
நம் நாட்டின் கலாச்சார, பண்பாட்டு, ஆன்மீகப் பெருமைகளை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவரும், துணிச்சலின் உருவமாகவும், ஆன்மீகத்தின் உயிர் வடிவமாகவும் திகழ்ந்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் தன்னம்பிகையை ஊட்டியவருமான வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இன்று…
”நீ எதுவாக நினைக்கிறாயோ? அதுவாக நீ ஆவாய் “ என்ற ஆழமான தத்துவத்தின் மூலம் இன்றைய கால இளைஞர்களுக்கு உந்து சக்தியாக விளங்கி வரும் சுவாமி விவேகானந்தர் அவர்களையும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b