Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன் , 04 ஜூலை (ஹி.ச.)
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 4-வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கலிபோர்னியாவில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி டாஸில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கி ரன்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
4-வது மேஜர் லீக் டி20 தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அந்த வகையில், இன்றைய ஆட்டமும் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA