தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம் - 2.29 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னை, 04 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு இன்று தொடங்குகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்த தேர்வின் முதல் தாள் இன்றும், இரண்டாம் தாள் நாளையும் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தாள் ஒன்று தேர்வை மாநிலம் முழுவ
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம் - 2.29 லட்சம் பேர் பங்கேற்பு


சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு இன்று தொடங்குகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்த தேர்வின் முதல் தாள் இன்றும், இரண்டாம் தாள் நாளையும் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் தாள் ஒன்று தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 222 தேர்வு மையங்களில் மொத்தம் 61,386 பேர் எழுதுகின்றனர்.

இதில் 12,001 ஆண் தேர்வர்களும், 49,385 பெண் தேர்வர்களும் அடங்குவர். மேலும் 1,321 மாற்றுத்திறனாளி தேர்வர்களும் இன்று தேர்வு எழுத உள்ளனர்.

தாள் ஒன்று தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர் பணிக்கானது.

நாளை நடைபெறும் தாள் இரண்டு தேர்வுக்கு மிக அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

613 மையங்களில் 1,67,743 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 40,535 பேர் ஆண்களாகவும், 1,27,208 பேர் பெண்களாகவும் உள்ளனர். 3,151 மாற்றுத்திறனாளிகளும் தாள் இரண்டு தேர்வில் பங்கேற்கின்றனர்.

இந்த தாள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கானது.

இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 2,29,129 தேர்வர்கள் தகுதித் தேர்வை எழுத உள்ளனர்.

தேர்வு மையங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் அனைவரும் காலை 8:30 மணி முதல் 9:30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் நுழைய வேண்டும் எனவும், காலதாமதமாக வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

தேர்வர்கள் ஹால் டிக்கெட் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்,

என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b