கோவையில் டொயோட்டாவின் முழு மின்சார 'அர்பன் க்ரூயிசர் இபெல்லா' அறிமுகம்- ஹைரைடர் ஆனைமலைஸ் லிமிடெட் எடிஷனும் வெளியீடு
கோவை , 04 ஜூலை (ஹி.ச.) கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டாவின் புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா (Urban Cruiser EBELLA) கார் அறிமுக விழா நடைபெற்றது. இதனுடன் ஹைரைடர் ஆனைமலைஸ் லிமிடெட் எடிஷன் காரு
A


கோவை , 04 ஜூலை (ஹி.ச.)

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டாவின் புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா (Urban Cruiser EBELLA) கார் அறிமுக விழா நடைபெற்றது.

இதனுடன் ஹைரைடர் ஆனைமலைஸ் லிமிடெட் எடிஷன் காரும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள், வங்கி அதிகாரிகள், ஷோரூம் ஊழியர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு புதிய மாடல்களை பார்வையிட்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐசர் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் ராஜன் ஆறுமுகம், தலைமை நிலைய நிர்வாகிகள் முரளிதரன் மற்றும் தரணிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், டொயோட்டாவின் புதிய அர்பன் க்ரூயிசர் இபெல்லா வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஹைரைடர் ஆனைமலைஸ் லிமிடெட் எடிஷன் மாடல் காரும் வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்க்கும் எனக் குறிப்பிட்டனர்.

புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் அவற்றை ஆர்வமுடன் பார்வையிட்டு, அதன் சிறப்பம்சங்கள் குறித்து நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA