மகனின் கோபத்தால் பறிபோன தந்தையின் உயிர் - சிறுவன் உள்பட 7 பேர் கைது
தென்காசி, 04 ஜூலை (ஹி.ச.) தென்காசி நகரப் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அஜயன் (வயது 50) என்பவர் அந்த பகுதியை சேர்ந்த சில நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெ
Tenkasi Police Station


தென்காசி, 04 ஜூலை (ஹி.ச.)

தென்காசி நகரப் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அஜயன் (வயது 50) என்பவர் அந்த பகுதியை சேர்ந்த சில நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, அஜயனுக்கும் அந்தப் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வரும் நிலையில், சம்பவத்தன்று 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் கூச்சலிட்டு கொண்டிருந்ததாகவும் அப்பொழுது அதனை அஜயன் தட்டி கேட்ட நிலையில், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜயனின் மகன் ஆதித்யன் ஆவேசம் அடைந்து அரிவாளால் அந்த கும்பலில் இருந்த காளிமுத்து என்ற நபரை வெட்டி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் மதுபோதையில் ஆதித்யனின் தந்தையான அஜனை சரமாரியாக தாக்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிறுவன் உட்பட ஐயப்பன், கோவிந்தராஜ், கொம்பையா, காசிநாதன், பிரகாஷ், ரித்தீஷ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN