அம்மோனியா அகற்றும் பணி தொடங்கியது,மக்கள் அச்சப்பட வேண்டாம் – திருவள்ளூர் ஆட்சியர் கவிதா
திருவள்ளூர், 04 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் கவிதா, வருவாய்த்துறை, மருத்துவக்
Tiruvallur Collector Kavitha


திருவள்ளூர், 04 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.

இதையொட்டி மாவட்ட ஆட்சியர் கவிதா, வருவாய்த்துறை, மருத்துவக் குழு, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் வருகிறார்.

தொழிற்சாலையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ், காவல்துறை, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இன்று மாலை 5 மணி வரை அம்மோனியா அகற்றும் பணி நடைபெறும். இன்று பணி தொய்வு ஏற்பட்டால் நாளையும் தொடர உள்ளது.

இது தொடர்பாக,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா அளித்த பேட்டியில்,

மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். தொழிற்சாலையில் உள்ள அம்மோனியா பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிறது.

தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அகற்றப்படும் அம்மோனியா பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படும். தொழிற்சாலையில் இருந்த உணவுப் பொருட்களும் உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் உள்ளன.

பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN