பனையூரில் இன்று விஜய் ஆலோசனை - புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து முக்கிய முடிவு
சென்னை, 04 ஜூலை (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஜூலை 4) பிற்பகல் 3 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதா
TVK VIJAY SPEECH


சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஜூலை 4) பிற்பகல் 3 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையில், அண்மையில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்குவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியதாக இணைந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதோடு, ஏற்கனவே கட்சிக்காக பணியாற்றி வரும் நிர்வாகிகளின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, சமநிலையான பொறுப்பு வழங்கும் முறை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட அமைப்புகளை வலுப்படுத்துவது, எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்கான நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கை மற்றும் களப்பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களும் ஆலோசனையில் இடம்பெற வாய்ப்புள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தவெக தீவிரம் காட்டி வரும் நிலையில், இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P