ஆற்காடு அருகே 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - கஞ்சா போதையில் இளைஞர் கைது
வேலூர், 04 ஜூலை (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, வீட்டில் தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து,போலீசார் தெரிவித்தத
Drug


வேலூர், 04 ஜூலை (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, வீட்டில் தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து,போலீசார் தெரிவித்ததாவது,

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண், மகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆற்காடு அருகேயுள்ள கிராமத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அதிகாலை கஞ்சா போதையில் அவரது வீட்டுக்கு வந்த இளைஞர், கதவைத் திறந்த மூதாட்டியின் வாயை துணியால் பொத்தி வீட்டுக்குள் தள்ளி, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் பேரில், ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ஆற்காடு அருகேயுள்ள அத்திதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி (23) என்பவர் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P