திண்டுக்கல் தாடிக்கொம்பில் 650 கிலோ குட்கா பறிமுதல் - கண்டெய்னர் லாரியுடன் ஓட்டுநர் கைது
திண்டுக்கல், 05 ஜூலை (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 650 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீ
650 kg of Gutkha seized in Dindigul


திண்டுக்கல், 05 ஜூலை (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 650 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியின் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக இப்பொருட்களை பொருட்கள் விற்பனை செய்வோர், பொருட்களைக் கடத்தி வருபவர்கள், இவற்றை தயார் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b