திருமலையில் ஒரே நாளில் 90,546 பக்தர்கள் தரிசனம் – ரூ.3.93 கோடி உண்டியல் காணிக்கை
திருமலை , 05 ஜூலை (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 90,546 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 93 லட்சமாக பதிவாகியுள்ளது. திருமலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து
A


திருமலை , 05 ஜூலை (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 90,546 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 93 லட்சமாக பதிவாகியுள்ளது.

திருமலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் நடைபெற்ற தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று ஒரே நாளில் 36,303 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

மேலும் 4.61 லட்சம் லட்டுகள் விற்பனையானது.

அன்னபிரசாதம் பெற்ற பக்தர்கள் எண்ணிக்கை 2.54 லட்சமாகவும், மருத்துவ சேவைகளை 3,162 பக்தர்கள் பயன்படுத்தியதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பக்தர்கள் கூட்டநிலை அதிகரித்ததால் சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.டி டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA