Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 05 ஜூலை (ஹி.ச.)
நடிகர் பிரகாஷ் ராஜ் மீது ஜனசேனா கட்சியின் திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண்க்கு எதிராக அரசியல் சதி செய்து வருவதாகவும், மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் ராயல், இதற்கான ஆதாரமாக சில ஆடியோ கிளிப்பிங்களை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
“ராவண், ஸ்ரவண்” என்ற நபர்களுடன் இணைந்து சமூக வலைதளங்களில் தவறான பிரச்சாரம் செய்து, மத விரோதத்தை தூண்டும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என அவர் கூறினார்.
மேலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பார்ட்டி சமூக ஊடக பிரிவு மூலம் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், இதன் பின்னணியில் பெரிய சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிரண் ராயல் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA