Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும் நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினரை நேரில் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
எல்லைகளைக் கடந்து வாழும் தமிழர்களின் தமிழ் மொழி மீதான அன்பு, பற்று மற்றும் அர்ப்பணிப்பு பெருமைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தமிழர் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இதுபோன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் பண்பு தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை அன்போடும் உற்சாகத்தோடும் வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, நியூஜெர்சி தமிழ்ப் பேரவை மற்றும் விழாவில் பங்கேற்ற அனைத்து தமிழர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள அண்ணாமலை,
தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ