சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சி. விஜயபாஸ்கரை த.வெ.க.வில் இணைத்தது ஏன்? – அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை, 05 ஜூலை (ஹி.ச) சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கரை, தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சியில் இணைத்துக் கொண்டது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழ
A


சென்னை, 05 ஜூலை (ஹி.ச)

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கரை, தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சியில் இணைத்துக் கொண்டது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் சி. விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறப்போர் இயக்கம்,

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை ஆளுங்கட்சி விழா நடத்தி பாராட்டி தனது கட்சியில் இணைத்துக் கொண்டால், அவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, லஞ்ச ஒழிப்புத்துறையும் அரசு வழக்கறிஞர்களும் எவ்வாறு நியாயமாக ஆதாரங்களை முன்வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இதற்கு பதில் இருக்கிறதா, முதலமைச்சர் விஜய் அவர்களே? என்றும் அறப்போர் இயக்கம் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ