சென்னை மாநகராட்சி மருத்துவ இணையியல் (NM) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, 05 ஜூலை (ஹி.ச.) சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில், 2026–27 கல்வியாண்டிற்கான இரண்டாண்டு மருத்துவ இணையியல் (Nursing Midwifery - NM) உதவி செவிலியர் பயிற்சிக்கான
Corporation


சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில், 2026–27 கல்வியாண்டிற்கான இரண்டாண்டு மருத்துவ இணையியல் (Nursing Midwifery - NM) உதவி செவிலியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சியில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவிகள், இயக்குநர், தொற்று நோய் மருத்துவமனை, எண் 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை – 600081 என்ற முகவரியில், நாளை (ஜூலை 6) முதல் ஜூலை 20 வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் வந்து சேர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ