Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப (IT) கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வன்பொருள் மற்றும் மென்பொருள் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி (e-Tender) கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள கணினிகள், சர்வர்கள், நெட்வொர்க் உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வன்பொருட்கள், மென்பொருட்கள் மற்றும் ஐடி தொடர்பான நுகர்பொருட்களுக்கு வசதி மேலாண்மை சேவை
(Facility Management Service) மற்றும் ஆண்டு பராமரிப்பு (AMC) மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தப் பணிக்காக ரூ.1,72,20,007 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.1,72,200-ஐ முன்வைப்புத் தொகையாக (EMD) செலுத்த வேண்டும்.
ஆர்வமுள்ள நிறுவனங்கள் தமிழக அரசின் மின்னணு டெண்டர் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் மற்றும் ஒப்பந்த விவரங்களைப் பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சிறப்பாக பராமரிக்கப்பட்டு, மாணவர்களின் டிஜிட்டல் கல்வி அனுபவம் மேம்படுவதுடன், கல்விச் சேவைகள் தடையின்றி தொடரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam