சென்னையில் இன்று மின்சார ரெயில்கள் ரத்து - கூடுதலாக 50 பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு
சென்னை, 05 ஜூலை (ஹி.ச.) சென்னை கடற்கரை-தாம் பரம் இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இன்று (ஜூலை 05) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் ரெயில் தண் டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இ
operate 50 additional buses.


சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)

சென்னை கடற்கரை-தாம் பரம் இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இன்று

(ஜூலை 05) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் ரெயில் தண் டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கமும் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகம், இன்று (ஜூலை 5-ந் தேதி) மற்றும் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில், பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக சென்னை கடற்கரை ரெயில் நிலையம்-தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இந்த பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b