Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 05 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தன.
இந்த நிலையில், நேற்றைய தினம் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில்
வெள்ளப்பெருக்கானது ஏற்பட்ட நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்றைய தினம் தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து சீரான நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் முதற்கட்டமாக குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் சற்று நேரத்தில் குற்றாலம் மெயின் அருவிலும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலைமோத வாய்ப்புள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN