Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 05 ஜூலை (ஹி.ச.)
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் விடுமுறை நாளை முன்னிட்டு இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுமார் மூன்று மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாகக் காட்சியளித்தது.
ராஜகோபுரம் முதல் கிழக்கு வாயில் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் அமைதியாக காத்திருந்து, 'அண்ணாமலைக்கு அரோகரா' கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பௌர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களைத் தவிர, சாதாரண விடுமுறை நாட்களிலும் இந்த அளவுக்கு கூட்டம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நேர காத்திருப்பு இருந்தபோதிலும், அண்ணாமலையாரை தரிசித்த மகிழ்ச்சியுடன் பக்தர்கள் திரும்பிச் சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b