கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலி - தப்பியோடிய ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு
கும்பகோணம், 05 ஜூலை (ஹி.ச.) கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 35) மற்றும் அவரது மன
Husband and wife killed after lorry hits


கும்பகோணம், 05 ஜூலை (ஹி.ச.)

கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த லாரி மோதியது.

இந்த கோர விபத்தில் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 35) மற்றும் அவரது மனைவி அனுசுயா (வயது 30) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கும்பகோணம் தாலுகா காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b