Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர் , 05 ஜூலை (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில், கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந் தேதி தொடங்கியது.
வருகிற ஆகஸ்ட் 28-ந் தேதி வரை 57 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரையில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், யாத்திரை தொடங்கிய முதல் 2 நாட்களில் மட்டும் 32 ஆயிரத்து 485 பக்தர்கள் அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாத்திரை பாதை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்களுக்குத் தேவையான மருத்துவம், குடிநீர், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமர்நாத் யாத்திரையில் 3 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA