Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 05 ஜூலை (ஹி.ச.)
சர்வதேச சுற்றுலா மையமாக விளங்கும் கன்னியாகுமரியில், வார விடுமுறையை முன்னிட்டு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால், கன்னியாகுமரி பகுதி காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது.
அதிகாலை எழுந்த சுற்றுலா பயணிகள், கடற்கரையில் திரண்டு நின்று கண்கவர் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
பலர் அந்த அழகிய தருணங்களை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பியாக பதிவு செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, கடல் அலைகளில் விளையாடி குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.
இதையடுத்து, புகழ்பெற்ற பகவதியம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், விவேகானந்தர் பாறை நினைவிடம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
வார விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்ததால், கடற்கரை, கோவில் வளாகம் மற்றும் சுற்றுலா மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டன.
இதனால் கன்னியாகுமரி முழுவதும் விழாக்கோலம் பூண்டதுபோல் உற்சாகமான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / ANANDHAN