அரசு ஆய்வகத் தொழில்நுட்புனர்கள் சங்க வெள்ளி விழாவில் அமைச்சர் புறக்கணித்ததாக வெளியான தகவல் தவறு – விழா ஏற்பாட்டாளர்கள் விளக்கம்
மதுரை, 05 ஜூலை (ஹி.ச.) மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐ.எம்.ஏ. (IMA) அரங்கில் அரசு ஆய்வகத் தொழில்நுட்புனர்கள் சங்கத்தின் 25-வது வெள்ளி விழா இன்று காலை 9 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக எரிசக்தி மற்றும் ச
நிர்மல்குமார்


மதுரை, 05 ஜூலை (ஹி.ச.)

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐ.எம்.ஏ. (IMA) அரங்கில் அரசு ஆய்வகத் தொழில்நுட்புனர்கள் சங்கத்தின் 25-வது வெள்ளி விழா இன்று காலை 9 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காலை 9.50 மணியளவில் விழா அரங்கிற்கு வந்தார்.

அப்போது விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்த மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அ. கள்ளழகர் மற்றும் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எம். கோபிநாதன் ஆகியோர் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விழா ஏற்பாட்டாளர்களிடம் பேசிய அமைச்சர், முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மதுரை மாவட்டம் சிவராக்கோட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின்னர் மீண்டும் வெள்ளி விழாவிற்கு திரும்பி வருவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக விழா நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் விழாவை புறக்கணித்து வெளியேறிவிட்டதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும், அவரது வருகை மற்றும் புறப்பட்டுச் சென்றதற்கான காரணம் குறித்து தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஆய்வகத் தொழில்நுட்புனர்கள் சங்கத்தின் 25-வது வெள்ளி விழா இன்று பிற்பகல் 3 மணி வரை திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam