Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 05 ஜூலை (ஹி.ச.)
மும்பை நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களிலும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம்
(India Meteorological Department) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மும்பையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று முதல் நகரில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
ஒரே 12 மணி நேரத்தில் சுமார் 20 செ.மீ மழை பதிவாகி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், அடுத்த 3 நாட்களில் சில பகுதிகளில் 50 செ.மீ வரை அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதால், தொடர்ந்து வானிலை எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்றுமாறு மாநில நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA