Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 05 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்று வினாடிக்கு 109 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 97 கன அடியாக சரிந்துள்ளது.
1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். இந்த அணை, தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
வழக்கமாக குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததால் பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்படவில்லை.
இருப்பினும், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.15 அடியாகவும், நீர் இருப்பு 39.18 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN