குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கியது திமுக தான் - செங்கோட்டையன்
ஈரோடு, 05 ஜூலை (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சிறந்த ஆட்சியை தருவதற்காக முதல்வர் உள்ளார். இரண்டாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் த
Minister Sengottaiyan


ஈரோடு, 05 ஜூலை (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

சிறந்த ஆட்சியை தருவதற்காக முதல்வர் உள்ளார். இரண்டாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் தலைமையில் அனைத்து துறை அதிகாரி உடன் ஆய்வு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு இந்தியாவில் மிகச்சிறந்த மாநிலமாக உருவாகி வருகிறது.

மக்களை நேசிக்கிற பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இது மக்களுக்கான ஆட்சி.

குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கியது திமுக தான், குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

கரூரில் கணக்கு உள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்த கேள்விக்கு,

கரூர் கணக்கு என்பது உயிரிழந்த 41 நபர்களுக்கு செய்ய வேண்டும் என்ற கணக்கு உள்ளது.

தவிர வேறு ஏதும் கிடையாது என சூசகமாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN