Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னி அரசு,
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் சமீபத்திய செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
லோக் பவனின் கதவுகள் எப்போதும் மக்களுக்காக திறந்தே இருக்கும்; பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம், அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என்று ஆளுநர் அர்லேக்கர் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வன்னி அரசு,
தவெக அரசை பலவீனப்படுத்தவும், தமிழக அரசுக்கு எதிராக இணை அரசாங்கம் நடத்தவும் ஆளுநர் முயற்சி செய்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளை மீறி ஆளுநர் செயல்படுகிறார்.
இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மக்களின் குறைகளை நேரடியாக ஆளுநர் மாளிகையில் பெறுவதாக ஆளுநர் அறிவித்திருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகார வரம்பில் தலையிடும் முயற்சியாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam