Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 05 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி பகுதியில் காளிமுத்து (வயது 48) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரது தலையை மட்டும் வெட்டி எடுத்த மர்ம கும்பல், 5 கிலோ மீட்டர் தூரத்தில் கல்லிடைக் குறிச்சி அருகே கரம்பை நெடுஞ்சாலையில் வைத்து விட்டு சென்றது.
இந்த சம்பவத்தின் போது காளிமுத்து வந்த இரு சக்கர வாகனத்தின் மீது காரை கொண்டு பலமாக மோதியதில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுவன் சின்னதுரை (வயது 15) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் நேற்று மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த 13 பேரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது 8 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
Hindusthan Samachar / ANANDHAN