Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 05 ஜூலை (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சாலையில் டிராக்டர் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில், சவுக்கு நாற்று நடும் பணிக்குச் சென்ற நான்கு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும், எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
சவுக்கு நாற்று நடும் பணிக்காக கூலி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது, பின்னால் வந்த டாட்டா ஏஸ் வாகனம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் 4 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த எட்டு பேரை மீட்ட அப்பகுதியினர் மற்றும் போலீசார், சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN