Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 05 ஜூலை (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன் மீது எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு மட்டும் முன்னுரிமை அளித்து மதுபான பாட்டில்களை சப்ளை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விதிமுறைகளை மீறி ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நிர்வாக ரீதியான நடவடிக்கையாக மேலாளர் கேசவனை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து மதுபான கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கைகளும் விதிமுறைகளின்படி நடைபெற வேண்டும் என்ற நிலையில், இந்த முறைகேடு புகார் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விரிவான துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b